/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிருஷ்ணாபுரத்தில் தார் சாலை அமைப்பு
/
கிருஷ்ணாபுரத்தில் தார் சாலை அமைப்பு
ADDED : ஜன 12, 2026 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம்: திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் அருகே கிருஷ்ணாபுரம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக 2 கி.மீ.,க்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்தது. பொதுமக்கள் கூறியதாவது:
பல ஆண்டுகளாக அமைக்கப்படாமல் இருந்த பெரியபட்டினம் அருகே கிருஷ்ணாபுரம் செல்லும் தார் சாலை தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. தார் சாலையை தரமாகவும், நீண்ட காலத்திற்கு உழைப்பதற்கு ஏற்றவாறு அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

