ADDED : செப் 07, 2026 10:22 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: பரமக்குடி தாலுகா மற்றும் நகரில் செப்.,11 ல் இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடக்கிறது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்களையும் மூட வேண்டும்.
எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மற்றும் எப்.எல் 4ஏ உரிமம் பெற்று இயங்கி வரும் மதுபான விற்பனைக் கூடங்களும் செப்.,10, 11( வியாழன், வெள்ளி) ஆகிய தேதிகளில் மூட உத்தரவிடப்படுகிறது. விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். ––––
