ADDED : ஏப் 13, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்.,23 நடக்கிறது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 மணி நேரத்திற்கு முன் அரசு டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.,2, எப்.எல்.,3, உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், எப்.எல்.,4ஏ உரிமம் பெற்றுள்ளா மண்டபம் கடலோர காவல்படை, உச்சிப்புளி ஐ.என்.எஸ்., பருந்து, நேவல் ஏர் ஸ்டேசனில் உள்ள மதுபான விற்பனை கூடங்களை மூட வேண்டும்.
இதனால் ஏப்.,21 முதல் ஏப்.,23 வரை மதுபான கடைகள் செயல்படாது. அதே போல் ஓட்டு எண்ணிக்கை நாளான மே 4ல் கடைகளை முழுமையாக மூட வேண்டும். அதனை மீறி மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
