/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க மண்டல கூட்டம்
/
டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க மண்டல கூட்டம்
ADDED : ஜன 09, 2025 05:04 AM

ராமநாதபுரம்: டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் மதுரை மண்டல கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. ஜன.26ல் சென்னையில் கோரிக்கை வெல்லும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க முடிவு செய்தனர்.
ராமநாதபுரம் தனியார் மகாலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சித்தநாதன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இளங்கோ, துணை செயலாளர் ரத்தினம், பொருளாளர் தனபாலன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராமபாண்டி வரவேற்றார்.
மாநில சிறப்புத்தலைவர் பாரதி, மாநில தலைவர் முருகன், மாநில துணைச் செயலாளர் குமார், மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணி வரன்முறை, பணி முடிந்த பிறகும் பணி செய்ய நிர்பந்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னையில் ஜன. 26 ல் நடக்கும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.