/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 22, 2025 05:42 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாவட்டத்தலைவர் நம்புராஜன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத்தலைவர் அய்யாத்துரை துவக்கி வைத்து பேசினார்.
மாவட்ட பொருளாளர் பால்ராஜ், முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் சந்தானம்,பொருளாளர் முத்துவிஜயன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் அழகர்சாமி, மாவட்ட செயலாளர் தனுஷ்கோடி பங்கேற்றனர்.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி நிறைவு செய்து பேசினார். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜசேகர் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் 22 ஆண்டுகளாக டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களை பணி தொடர்ச்சியுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு பணி ஓய்வுக்கான வயது 60 ஆக உயர்த்தியிருப்பது போல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி ஓய்வு 60 வயதாக்க வேண்டும்.
டாஸ்மாக் நிறுவனத்தின் மருத்துவ திட்டத்தை திரும்ப பெற்று இ.எஸ்.ஐ., மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.----------