UPDATED : அக் 13, 2026 05:32 PM
ADDED : அக் 13, 2026 05:17 PM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் டாஸ்மாக் கோடவுன் முன்பு டாஸ்மாக் கோடவுன் சுமைப்பணி தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் மாவட்ட தலைவர் சுடலைக்காசி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சந்தானம் முன்னிலை வகித்தார். இதில் மதுபான பெட்டிகளை ஸ்கேன் செய்வோருக்கு கூலி வழங்க வேண்டும்.
கோடவுன் பணியாளர்களுக்கு ஏற்றுக்கூலி பெட்டிக்கு ரூ.5 என்பதை டெண்டர் விதிகளில் குறிப்பிட வேண்டும். தீபாவளி போனஸ் 10 நாட்களுக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடவுன்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். 2027, ஜன., முதல் இறக்குக் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். டாஸ்மாக் சங்க செயலாளர் தனுஷ்கோடி, சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் செயலாளர் ஜகாங்கீர், கிளைத் தலைவர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ---
