/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு ஜன.26 முதல் காத்திருப்பு போராட்டம்
/
டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு ஜன.26 முதல் காத்திருப்பு போராட்டம்
டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு ஜன.26 முதல் காத்திருப்பு போராட்டம்
டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு ஜன.26 முதல் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 10, 2025 04:50 AM

ராமநாதபுரம்: -தமிழக டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஜன.26 முதல் சென்னை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வெல்லும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கத்தின் மாநில சிறப்புத்தலைவர் பாரதி தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் நடந்த சங்க மதுரை மண்டல போராட்ட ஆயத்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில சிறப்புத்தலைவர் பாரதி கூறியதாவது:
தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் பணி நிரந்தரம் இல்லாமல் மாதம் ரூ.9000 சம்பளத்தில் தவிக்கின்றனர்.
கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. 21 ஆண்டுகள் அரசு ஊழியர் பணியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., வசதி செய்து தர வேண்டும். தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழக மக்கள் நலன் கருதி அரசு டாஸ்மாக் கடைகளை மூடினால் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்.
எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.26ல் சென்னை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு கோரிக்கை வெல்லும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறாமல் யாரும் அங்கிருந்து திரும்ப போவதில்லை. தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இந்த போராட்டத்தில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர் என்றார்.