/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வரி வசூல் மும்முரம்டூ தேர்தல் அறிவிப்பிற்குள் பணி முடிக்க முடிவு

ADDED : பிப் 08, 2024 06:40 AM
திருவாடானை, : ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி பேரூராட்சி, ஊராட்சிகளில் வரி வசூல் பணி மும்முரமாக நடக்கிறது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்குள் வசூல் பணிகளை முடிக்கயுள்ளனர்.
மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 429 ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டு தோறும் வரியினங்கள் ஏப்.1 முதல் மார்ச் 31 வரை என்ற அடிப்படையில் வசூலிக்கப் படுகிறது. ஆண்டு தோறும் வரியினங்கள் வசூல் செய்யபட்டாலும், பெரும்பாலானோர் நிதியாண்டு இறுதியில் தான் செலுத்துவர்.
உள்ளாட்சி அமைப்புகளும் இந்த காலக்கட்டத்தில் தான் மும்முரமாக வரி வசூலை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. இவ்வாண்டு லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் வரி வசூலில் முழுமையாக ஈடுபட முடியாது. இதை கருத்தில் கொண்டு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குறிப்பாக தொண்டி பேரூராட்சி மற்றும் திருவாடானை தாலுகாவில் உள்ள 47 ஊராட்சிகளிலும் தற்போது வரி வசூல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அலுவலர்கள் கூறுகையில், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வரி வசூல் இலக்கை எட்ட வேண்டும். அதற்கேற்ப பணிகளை மும்முரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி செயலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வரி நிலுவை குறித்த அறிவிப்புகளை வீடு, வீடாக வழங்கி வருவதுடன் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி அமைத்து அறிவுறுத்தபடுகிறது என்றனர்.
---