/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் காசநோய் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்
/
ராமநாதபுரத்தில் காசநோய் விழிப்புணர்வு ஸ்கேட்டிங்
ADDED : பிப் 21, 2024 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -உலக காச நோய் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை காச நோய் தடுப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங்பயணம் நடந்தது.
மெனு ஸ்கேட்டிங் அகாடமியும், ராமநாதபுரம் காச நோய் தடுப்பு பிரிவினர் இணைந்து இந்த ஸ்கேட்டிங் பயணத்தை நடத்தினர்.
எஸ்.பி., சந்தீஷ் துவக்கி வைத்தார். காச நோய் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் ரமேஷ், விருதுநகர் பிளாசம் டிரஸ்ட் இயக்குநர் மெர்சி அன்னபூரணி ஆகியோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரத்தில் துவங்கி ராமேஸ்வரம் அப்துல்கலாம் தேசிய நினைவகம் வரை செல்கின்றனர். வழியில் காச நோய் தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர்.---------