ADDED : செப் 07, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி அருகே சோமநாதபுரம் சவுராஷ்டிரா தேசிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. தேசிய கல்விக் கழக தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். தாளாளர் குப்புச்சாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி வரவேற்றார்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் தினகரன் தேசியக் கொடி ஏற்றி வைத்து பேசினார். திறன் வளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியை நாகேஸ்வரி நன்றி கூறினார்.
