ADDED : செப் 04, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் இனிய தமிழ் சங்கம், கலை இலக்கிய மன்றம் சார்பில் ஆசிரியர் தினவிழா மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். டாக்டர்கள் ராசிகா அப்துல்லா, அஜிதா, ஆயிஷத்துல் நசீதா, சானாஸ், பரிதா, அறக்கட்டளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
கேரள பாரம்பரிய உடை அணிந்து ஓணம் வாழ்த்துக்களை பரிமாறினர். பேராசிரியர் சித்தி ஷமீம் பாத்திமா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆங்கிலத் துறை பேராசிரியர் கவிதா, துறை தலைவர்கள் செய்தனர்.