/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜவ்வாக இழுக்கிறது கலை திருவிழாபோட்டி கற்பித்தல் பாதிப்பதாக ஆசிரியர்கள் குமுறல்
/
ஜவ்வாக இழுக்கிறது கலை திருவிழாபோட்டி கற்பித்தல் பாதிப்பதாக ஆசிரியர்கள் குமுறல்
ஜவ்வாக இழுக்கிறது கலை திருவிழாபோட்டி கற்பித்தல் பாதிப்பதாக ஆசிரியர்கள் குமுறல்
ஜவ்வாக இழுக்கிறது கலை திருவிழாபோட்டி கற்பித்தல் பாதிப்பதாக ஆசிரியர்கள் குமுறல்
ADDED : அக் 18, 2024 03:12 AM
ராமநாதபுரம்,:தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் கலைத்திருவிழா ஜவ்வாக இழுத்தடிக்கப்படுகிறது. கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் ஆக.,22 முதல் செப்., 10க்குள் நடத்தி முடிக்கவும், வென்றவர்கள் விபரம் செப்., 12க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட்டனர். பின்னர் போட்டியினை பள்ளி அளவில் நடத்தி அதனை வீடியோவாக கூகுள் டிரைவில் பதிவு செய்து எமிஸ் தளத்தில் செப்., 27க்குள் பதிவு செய்ய வேண்டும்.
அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வட்டார, மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.
இந்நிலையில், மீண்டும் குறுவளமைய அளவில் கலைத்திருவிழா போட்டிகள் அக்., 14, 15 ஆகிய தேதிகளில் நடத்தி எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டனர்.
ஆனால் மழை காரணமாக அக்.,14,15 கலைத்திருவிழா போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன.
தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை அக்., 30க்குள் போட்டிகளை நடத்தி அன்றே எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நவ., 7 க்குள் வட்டார அளவிலான போட்டிகள் நடத்தி நவ., 8க்குள் எமிஸ்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்பு தொடங்கப்பட்ட கலைத்திருவிழா போட்டிகள் டிச.,ல் அரையாண்டு தேர்வு வரப்போகும் நிலையில் ஜவ்வாக இழுத்தடித்து கொண்டிருக்கின்றனர்.
கலைத் திருவிழா போட்டிகளுக்கான ஒத்திகை செய்வதில் மாணவர்களின் பெரும்பான்மை நேரம் வீணடிக்கப்பட்டு வருகிறது. கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.