/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஆசிரியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
/
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஆசிரியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஆசிரியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஆசிரியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 06, 2024 04:50 AM

ராமநாதபுரம் : -சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 16 வது நாளாக தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது.
இதனை நிறைவேற்ற வலியுறுத்தி இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு 16 வது நாளாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் வினோத்பாபு தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் தினேஷ்குமார் வரவேற்றார். ஆசிரியர் கிளமெண்ட், ஜான் பீட்டர், ஆசிரியை ரம்யா, ஆசிரியர் சிக்கந்தர் உட்பட நிர்வாகிகள் பேசினர்.