/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளி மாணவர் சேர்க்கை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள்
/
அரசு பள்ளி மாணவர் சேர்க்கை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள்
அரசு பள்ளி மாணவர் சேர்க்கை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள்
அரசு பள்ளி மாணவர் சேர்க்கை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள்
ADDED : ஏப் 10, 2025 05:52 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஆசிரியர்களும், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளும் தீவிரம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் மாணவர் சங்க தலைவர் சசிகுமார் தலைமையில்,தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம், ஆசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடம், அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தினர். மேலும் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்கள் குறித்தும், வேலை வாய்ப்பு முன்னுரிமைகள் குறித்தும் எடுத்துரைத்து மாணவர் சேர்க்கைக்கு வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பகுர்தீன், ஜெயக்குமார், அயூப்கான் உட்பட பலர் பங்கேற்றனர்.