/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முத்துப்பேட்டை கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்
/
முத்துப்பேட்டை கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்
முத்துப்பேட்டை கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்
முத்துப்பேட்டை கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்
ADDED : ஆக 15, 2025 11:17 PM

பெரியபட்டினம்: முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் சமூக வலைதள மேம்பாடு மற்றும் செயல்முறைப்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி செயலர் பிரான்சிஸ் தலைமை வகித்தார். முதல்வர் சூசைநாதன் முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் பிருந்தா வரவேற்றார்.
கணினியின் வலை மேம்பாடு மற்றும் செயல்முறை படுத்துதல் என்ற தலைப்பில் மென்பொருள் இன்ஜினியர் பயாஸ் அலி பங்கேற்று பேசினார். துணை முதல்வர்கள் மகாலட்சுமி, மதன்நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் ராம்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.