ADDED : மார் 17, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாநில முழுவதும் உள்ள தொழில்நுட்ப சம்மேளனம் சார்பில், டெக்னோவா - 2024 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார். முதலாம் ஆண்டு துறை தலைவர் உமையாள் வரவேற்றார். பல்வேறு கல்லூரிகளில் இருந்து பங்கேற்ற மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
செய்யது ஹமீதா கலை-அறிவியல் கல்லுாரி முதல்வர் ராஜசேகர், இன்ஜினியரிங் கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமார் பங்கேற்றனர். மின்னணுவியல் துறையின் தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

