தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தொழில் நுட்ப கருத்தரங்கம்

 தொழில் நுட்ப கருத்தரங்கம்

 தொழில் நுட்ப கருத்தரங்கம்


ADDED : ஏப் 11, 2026 03:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 03:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் கணினி பொறியியல் துறை சார்பில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குனர் ஹபீப் முகம்மது தலைமை வகித்தார்.முதல்வர் நிர்மல் கண்ணன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மதுரை எச்.சி.எல்., நிறுவனத்தின் மேலாளர் பத்மபிரியா பங்கேற்று பேசினார். 15 கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு விதமான ப்ராஜெக்ட் போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்பட்டது. மாணவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தவும், புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி நடந்தது.

டீன் அகாடமிக்ஸ் திராவிட செல்வி, கணினி பொறியியல் துறை தலைவர் பாலசுப்ரமணியன், பேராசிரியர்கள் காயத்ரி தேவி, சீனி புலவர் பிச்சை, பாவனா மெர்சி, மேகலாதேவி உட்பட பலர் பங்கேற்றனர். ஹைருல் பாத்திமா நன்றி கூறினார்.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us