/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழங்குடியினருக்கு தொழிழ்நுட்ப பயிற்சி
/
பழங்குடியினருக்கு தொழிழ்நுட்ப பயிற்சி
ADDED : ஜன 01, 2024 05:15 AM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த 18 முதல் 35 வயதான ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் தாட்கோ உதவியுடன் மருத்துவத்துறை சார்ந்த தொழிழ்நுட்ப பயிற்சிகள் பெறவிண்ணப்பிக்கலாம்.
ஆயுர்வேத மசாஜ், டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர், அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, செவிலியர் பயிற்சி, எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, யோகா மற்றும் ஆரோக்கிய பயிற்சி என பல்வேறு மருத்துவம் சார்ந்த பயிற்சிகள் முன்னணி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும்.
பயிற்சி முடித்த பிறகு வேலைவாய்ப்பு பெற்றுமாதாந்திர ஊதியமாக ரூ.12,000- முதல் ரூ.20,000 வரை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.