நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே துவார் பகுதியைச் சேர்ந்த ராமு மகன் பிரித்தி 29. இவருக்குஆனந்துாரை சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால் காவியா அவரது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் அங்கு சென்று காவியாவிடம் தகராறில் ஈடுபட்ட பிரித்தி அவரை தாக்கினார். அங்கிருந்து ஊருக்கு சென்ற பிரித்தி மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். ஆர்.எஸ். மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., முருகானந்தம் விசாரிக்கிறார்.