/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கஞ்சா கடத்தல் 2 ஆண்டுக்குப்பின் வாலிபர் கைது
/
இலங்கைக்கு கஞ்சா கடத்தல் 2 ஆண்டுக்குப்பின் வாலிபர் கைது
இலங்கைக்கு கஞ்சா கடத்தல் 2 ஆண்டுக்குப்பின் வாலிபர் கைது
இலங்கைக்கு கஞ்சா கடத்தல் 2 ஆண்டுக்குப்பின் வாலிபர் கைது
ADDED : அக் 03, 2024 02:32 AM

தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து இலங்கைக்கு 105 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் தப்பிச்சென்ற ராஜேஷ் 28, என்பவரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.
தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினம் கடற்கரையில் 2022 நவ.,26 ல் இலங்கைக்கு கடத்துவதற்காக முட்புதரில் 105 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. தொண்டி போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்த கஞ்சாவை வாங்குவதற்காக இலங்கையில் இருந்து படகில் வந்த கடத்தல்காரர்கள் போலீசாரை பார்த்ததும் படகை திருப்பிச்சென்று தப்பினர். இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தை சேர்ந்த கவுதம், ஹரிஷ், கார்த்திக் ஆகிய மூவரும் கைது செய்யபட்டனர்.
நேற்று முன்தினம் சென்னையில் பதுங்கி இருந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா உருவாட்டியை சேர்ந்த ராஜேஷ் 28. என்பவரை தொண்டி இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன், எஸ்.ஐ. விஷ்ணு தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.