ADDED : ஜூலை 12, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே தாமோதரபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ் 24. திருமணம் ஆகவில்லை. இன்ஜினியரிங் படித்துள்ளார். திருவாடானை அருகே அடுத்தகுடி வீரசக்தி அம்மன் கோயில் பூக்குழி விழாவை பார்த்து விட்டு டூவீலரில் வட்டாணம் ரோட்டில் சென்றார்.
என்.மங்கலம் விலக்கு ரோட்டில் செல்லும் போது துாக்க கலக்கத்தில் இருந்ததால் டூவீலரிலிருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஹரிஷ் இறந்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.