/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர் மீது ரயில் மோதி விபத்து வாலிபர் சிறையில் அடைப்பு
/
டூவீலர் மீது ரயில் மோதி விபத்து வாலிபர் சிறையில் அடைப்பு
டூவீலர் மீது ரயில் மோதி விபத்து வாலிபர் சிறையில் அடைப்பு
டூவீலர் மீது ரயில் மோதி விபத்து வாலிபர் சிறையில் அடைப்பு
ADDED : டிச 12, 2025 04:33 AM
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து டிச.,8 இரவு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. உச்சிப்புளி அருகே ஒருவர் டூவீலரில் பூட்டி இருந்த ரயில்வே கேட்டை சிறிய பாதை வழியாக தாண்டிச் செல்ல முயன்றார்.
ரயில் அருகே வந்த காரணத்தால் டூவீலரை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். தண்டவாளத்தில் சிக்கிய டூவீலர் மீது ரயில் இன்ஜின் மோதி 100 மீட்டர் வரை இழுத்துச் சென்றது.
அதிர்ஷ்டவசமாக ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்படவில்லை. ராமநாதபுரம் ரயில்வே போலீசார் விசாரித்தனர். தண்டவாளத்தில்டூவீலரை ஓட்டி வந்தது உச்சிப்புளியை அடுத்த நாகாச்சி பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் 21, என தெரிய வந்தது.
அவரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் டாஸ்மாக் கடையை அடைக்க நேரம் ஆனதால் ரயில்வே தண்டவாளத்தில் டூவீலரை ஓட்டிச் சென்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவர் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2ல் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.