ADDED : டிச 03, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கடலாடி அருகே ஆப்பனுாரில் கருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நவ.,30ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. இரண்டாம் கால யாகசாலை, கோபூஜை, தனபூஜை உள்ளிட்டவைகள் நடந்தது.
கருப்பண்ண சுவாமி கோயில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கு வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவினர், ஆப்பனுார் கிராம மக்கள் செய்திருந்தனர்.

