/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
களை கட்டிய கோயில் விழாக்கள் பட்டாசு விற்பனை அமோகம்
/
களை கட்டிய கோயில் விழாக்கள் பட்டாசு விற்பனை அமோகம்
களை கட்டிய கோயில் விழாக்கள் பட்டாசு விற்பனை அமோகம்
களை கட்டிய கோயில் விழாக்கள் பட்டாசு விற்பனை அமோகம்
ADDED : ஜூலை 20, 2025 10:57 PM
திருவாடானை: திருவாடானை பகுதியில் உள்ள கோயில்களில் திருவிழா களை கட்டியுள்ளால் பட்டாசு விற்பனை அமோகமாக உள்ளது.
ஆன்மிக வழிபாடுகளை கொண்ட ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில் திருவாடானை பகுதியில் உள்ள கோயில்களில் திருவிழாக்கள் களைகட்டியுள்ளது. தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அதில் ஆடி மாதம் பல்வேறு விழாக்களை கொண்டாடும் புனித மாதமாக கொண்டாடப்படுகிறது.
ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு, சுமங்கலிகளின் விளக்கு பூஜை, ஆடிப்பட்டம் தேடி விதைப்பது, குலதெய்வ வழிபாடு போன்ற அதிகபடியான விழாக்களை கொண்டதாக ஆடி மாதம் திகழ்கிறது.
முக்கிய விழாவாக ஆடி வெள்ளியன்று அம்மன் கோயில்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கிராமங்களில் முத்துமாரியம்மனுக்கு நடக்கும் விழாவில் கூழ் காய்ச்சி ஊற்றுவது நடைபெறும்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா, ஆற்றங்கரை மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா, தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் ஆடி அமாவாசை என ஆன்மிக நிகழ்ச்சிகள் களைகட்டியுள்ளது.
திருவிழாக்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. இதனால் பட்டாசு விற்பனை அமோகமாக உள்ளது.
சிலர் சிவகாசியிலிருந்து மொத்தமாக வாங்கி வந்து வெடிக்கின்றனர். கிராமங்களில் உள்ளூர் பட்டாசு விற்பனையாளர்களிடம் வாங்கி கொண்டாடுவதால் பட்டாசு விற்பனை அமோகமாக உள்ளது.

