
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே வழுதுாரில் அமைந்துள்ள தர்ம முனிஸ்வரர், பாட்டையா கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஜன.20ல் கணபதி பூஜையுடன் துவங்கி மனோகர குருக்கள் தலைமையில்கும்ப கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தது.
நேற்று (ஜன.21) காலை கடம் புறப்பாடு நடந்தது.காலை 10:25 மணிக்கு கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
அப்போது வானில் கருடன் வட்டமிட்டது.அன்னதானம் வழங்கப்பட்டது.
வழுதுார், தெற்கு காட்டூர், வாலாந்தரவை ரெகுநாதபுரம், காரான், ராமநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்து பக்தர்கள்பங்கேற்றனர்.