/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் வாக்குறுதிபடி பூஜாரிகள் நலவாரியம் அமைக்க வேண்டும்: கோயில் பூஜாரிகள் சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஜன 28, 2025 12:53 AM

ராமநாதபுரம் : ''சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு பூஜாரிகள் நலவாரியத்தை அமைக்க வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில் கோயில் பூஜாரிகள் நலச்சங்கத்தின் தென்மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஓய்வுபெற்ற பூஜாரிகள் ஆளறி சான்றிதழ் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அஞ்சலகம் மூலம் ஆளறி சான்றிதழ் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் பூஜாரிகளின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர். ஒரு காலபூஜை திட்டத்தில் பணிபுரியும் கோயில் பூஜாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் அறவழியில் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றார்.