/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கரைந்து ஓடிய சிமென்ட் கலவை காணாமல் போன கோயில் ரோடு
/
கரைந்து ஓடிய சிமென்ட் கலவை காணாமல் போன கோயில் ரோடு
கரைந்து ஓடிய சிமென்ட் கலவை காணாமல் போன கோயில் ரோடு
கரைந்து ஓடிய சிமென்ட் கலவை காணாமல் போன கோயில் ரோடு
ADDED : நவ 25, 2025 05:27 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கோயில் சாலை அமைக்கும் பணி நடக்கும் நிலையில் கன மழையால் சிமென்ட் கலவைகள் கரைந்து வீணாகியது.
ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் கிழக்கு கோபுரம் எதிரில் சன்னதி தெரு வழியாக கோயிலுக்குள் செல்வார்கள். இங்கு புதிய சாலை அமைக்க அக்., 18ல் பழைய சாலையை அகற்றி இரண்டரை அடி பள்ளம் தோண்டினர். இதனை புதுப்பிக்காமல் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தாமதப்படுத்தினர். இதனால் பக்தர்கள் இடறி விழுந்து காயம் அடைந்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில் புதிய சாலை அமைக்கும் பணியை துவக்கினர். நேற்று பெய்த கனமழையில் சாலை அமைத்ததால் சிமென்ட் கலவைகள் மழை நீரில் கரைந்து வீணாகியது. இதனால் புதிய சிமென்ட் சாலையின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.
பழைய சாலையை அகற்றி 36 நாள்களை கடந்தும், இன்னும் சாலை பணியை முடிக்காமல் இழுத்தடிப்பதால் பக்தர்கள் நடந்து அவதிப்படுகின்றனர்.

