/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்து நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்

ADDED : அக் 13, 2024 07:24 AM
ராமேஸ்வரம் : பத்து நாட்களுக்குப் பின் நேற்று ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
செப்.29ல் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் அக்.2 முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்தனர். இந்நிலையில் அக்.10ல் இலங்கை மன்னார் நீதிமன்றம் மீனவர்கள் 17 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.
இதனை அவர்கள் செலுத்தியதால் 17 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதன் பின் மீனவர்கள் கொழும்பு மெரிக்கானா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து வாழ்வாதாரம் கருதி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நேற்று 361 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.
பத்து நாட்களுக்கு பின் சென்றதால் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற ஆவலில் இருந்த மீனவர்கள் இலங்கை கடற்படை சிறைபிடிப்பு கெடுபிடியால் அச்சத்தில் உள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு இன்று காலை ராமேஸ்வரம் கரை திரும்ப உள்ளனர்.