/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்தாம் வகுப்பு மாணவன் துாக்கிட்டு தற்கொலை
/
பத்தாம் வகுப்பு மாணவன் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஏப் 16, 2025 06:22 AM
பரமக்குடி,: பரமக்குடி அருகே பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி வந்த மாணவன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
பரமக்குடியை அடுத்த தெய்வதானம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன் கரண் 15. இவர் முதுகுளத்துார் வளநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். நேற்று(ஏப்.,15) கடைசி தேர்வு எழுத இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக படித்துக் கொண்டிருந்த நிலையில் மாணவன் வெகு நேரமாக வெளியில் வராத்தால் இரவு 10:30 மணிக்கு பெற்றோர் கதவை தட்டி உள்ளனர்.
கதவை திறக்காததால் பெற்றோர் கதவை உடைத்து பார்த்ததில் மாணவன் சேலையில் துாக்கிட்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த டாக்டர் மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சத்திரக்குடி போலீசார் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். மாணவன் இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.

