/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்விதுறைக்கு சோதனை: ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலகம் இல்லை
/
கல்விதுறைக்கு சோதனை: ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலகம் இல்லை
கல்விதுறைக்கு சோதனை: ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலகம் இல்லை
கல்விதுறைக்கு சோதனை: ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலகம் இல்லை
ADDED : பிப் 13, 2025 06:36 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள் என அனைத்தும் தனித்தனியாக இயங்குகின்றன. தனியாக கூட்ட அரங்கம் இல்லாததால் ஆசிரியர், தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி, ஆலோசனை கூட்டங்கள் நடத்த இடம் தேடி கல்வித் துறை அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் தவிர்த்து பிற மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள் உள்ளிட்டவை தனிக்கட்டடத்தில் கல்வித்துறை அலுவலகங்களை ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகம், பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெருக்கடியான இடத்தில் செயல்படுகிறது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் ஓம்சக்தி நகரில் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடத்தில் குறுகிய இடத்தில் உள்ளது. பள்ளி, ஆசிரியர் பணி தொடர்பான சான்றுகள் தொலைந்து விட்டால் முதன்மை கல்வி அலுவலகத்தை தேடி வருகின்றனர்.
ஆசியர்களுக்கான பணியிடை பயிற்சி அளிக்கவும் இடமில்லை. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம், அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை நாட வேண்டியுள்ளது. எனவே முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தேர்வுத் துறை அலுவலகம், உடற்கல்வி இயக்குநர் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்களை ஒருங்கிணைந்து தனியாக பள்ளி கல்விதுறைக்கு ஒருங்கிணைந்த கட்டடம் கட்டித்தர அரசு உத்தரவிட வேண்டும்.
இதுதொடர்பாக புதிதாக வரும் கலெக்டர்களிடம் முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் இடம் கேட்டு 3 ஆண்டுகளாக மனு அளித்தும், இதுவரை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. எனவே தற்போதைய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-