/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தை அமாவாசை : நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்
/
தை அமாவாசை : நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்
தை அமாவாசை : நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்
தை அமாவாசை : நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்
ADDED : ஜன 30, 2025 02:32 AM

தேவிபட்டினம்:தை அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன.
இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நேற்று தை அமாவாசை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நவபாஷாண கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டிருந்தது.
பக்தர்களுக்கான வசதிகளை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் மாரிமுத்து, எழுத்தர் தங்கவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.