/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜன.29ல் தை அமாவாசை ராமேஸ்வரத்தில் ஏற்பாடு
/
ஜன.29ல் தை அமாவாசை ராமேஸ்வரத்தில் ஏற்பாடு
ADDED : ஜன 22, 2025 07:00 AM
ராமேஸ்வரம் : ஜன., 29 தை அமாவாசையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட உள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தை, மாசி, ஆடி அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடிச் செல்வார்கள். அதன்படி ஜன., 29ல் தை அமாவாசை அன்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். காலை 5:00 மணி முதல் 5:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், கால பூஜை, சாயரட்சை பூஜை நடைபெறும்.
பின் காலை 11:00 மணிக்கு மேல் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர் மற்றும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுத்ததும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவார்கள். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடுவார்கள். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.