/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ஐயப்பன் கோயிலில் தை மகர ஜோதி தரிசன விழா: சரண கோஷத்துடன் வழிபாடு
/
பரமக்குடி ஐயப்பன் கோயிலில் தை மகர ஜோதி தரிசன விழா: சரண கோஷத்துடன் வழிபாடு
பரமக்குடி ஐயப்பன் கோயிலில் தை மகர ஜோதி தரிசன விழா: சரண கோஷத்துடன் வழிபாடு
பரமக்குடி ஐயப்பன் கோயிலில் தை மகர ஜோதி தரிசன விழா: சரண கோஷத்துடன் வழிபாடு
ADDED : ஜன 14, 2025 08:10 PM

பரமக்குடி:
பரமக்குடி தர்மசாஸ்தா கோயிலில் தை மகர ஜோதி வழிபாடு நடந்ததுடன் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் பொங்கலையொட்டி தரிசனம் செய்தனர்.
பரமக்குடி தரைப்பாலம் அருகில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு புஷ்கலா தேவி தனி சன்னதியில் உள்ளார். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கேரளா ஆரியங்காவு கோயிலில் நடப்பதை போன்று திருக்கல்யாணம் நடக்கிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் மகரஜோதி தரிசன விழாவையொட்டி தீப ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
நேற்று மாலை 6:30 மணிக்கு ஐயப்பனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு மகரஜோதி தரிசனம் நடந்தது. ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க வழிபட்டனர். பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் மார்கழி உற்ஸவம் நிறைவடைந்ததை அடுத்து தை மாதப் பிறப்பையொட்டி திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பாடப்பட்டது. பின்னர் இரவு 7:00 மணிக்கு ராப்பத்து உற்ஸவம் நடந்தது.
இதேபோல் அனைத்து கோயில்களிலும் தைப்பொங்கல் விழாவையொட்டி மக்கள் வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்து கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.
* முதுகுளத்துார் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா பக்தர்கள் குழு சார்பில் தை மாத சிறப்பு பூஜை நடந்தது. குருநாதர் திருமால் தலைமை வகித்தார். கணபதி ஹோமம் பூர்ணாகுதி, யாகசால பூஜைகள் நடந்தது. படிபூஜை, பஜனை வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று முதுகுளத்துார்,கமுதி பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் தை மாதம் சிறப்பு பூஜை நடந்தது.