ADDED : பிப் 14, 2025 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தை பவுர்ணமியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள சிவன், அம்மன், முருகன் கோயில்களில் அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.
நேற்று பவுர்ணமியை முன்னிட்டு ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோயிலில் பால், பன்னீர், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் மூலவருக்கு அபிேஷகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.இதே போன்று மீனாட்சி சொக்கநாதர் கோயில், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் ஆகிய இடங்களில் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அபிேஷக அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன.பட்டணம்காத்தான் ஆதிஜோதி ராஜபத்திரகாளியம்மன் கோயிலுக்கு பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.