/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தைப்பூசம்: வழக்கமான பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கம்
/
தைப்பூசம்: வழக்கமான பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கம்
தைப்பூசம்: வழக்கமான பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கம்
தைப்பூசம்: வழக்கமான பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கம்
ADDED : பிப் 12, 2025 06:21 AM

திருவாடானை : தைப்பூசத்தை முன்னிட்டு வழக்கமான ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டதால் பயணிகள் தவித்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் வழக்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.
திருவாடானை பஸ் ஸ்டாண்டில் திருச்சி-ராமேஸ்வரம், மதுரை- தொண்டி செல்லும் வழக்கமான பஸ்களில் சில பஸ்கள் பழநிக்கு இயக்கப்பட்டன. குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் அந்த பஸ்சை எதிர்பார்த்து பயணிகள் சென்ற போது பஸ் வராததால் நீண்ட நேரமாக காத்திருந்து மற்ற பஸ்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
கைக்குழந்தையுடன் சென்ற பெண்கள் மற்றும் முதியோர் அவதிப்பட்டனர். பஸ்கள் வராதததால் இரு நாட்களாக பஸ்ஸ்டாண்ட் வெறிச்சோடியது.