/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தஞ்சாவூர் - சாயல்குடி நான்கு வழிச்சாலை அமைச்சர் வேலு நம்பிக்கை
/
தஞ்சாவூர் - சாயல்குடி நான்கு வழிச்சாலை அமைச்சர் வேலு நம்பிக்கை
தஞ்சாவூர் - சாயல்குடி நான்கு வழிச்சாலை அமைச்சர் வேலு நம்பிக்கை
தஞ்சாவூர் - சாயல்குடி நான்கு வழிச்சாலை அமைச்சர் வேலு நம்பிக்கை
ADDED : ஏப் 23, 2025 02:57 AM
சென்னை:''தஞ்சாவூர் - சாயல்குடி இடையே, நான்கு வழிச்சாலை அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்,'' என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தஞ்சாவூர் முதல் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, காளையார்கோவில், மறவமங்களம், இளையாங்குடி, பரமக்குடி, முதுகளத்துார் வழியாக, சாயல்குடி செல்லும் சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - பெரி செந்தில்நாதன்: தஞ்சாவூர் முதல் சாயல்குடி வரை செல்லும், 250 கி.மீ., சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்த சாலை, நான்கு மாவட்டங்களில் உள்ள, 12 சட்டசபை தொகுதிகளை இணைக்கும். நான்கு இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்.
அமைச்சர் வேலு: இது தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை. இதில், தஞ்சாவூரில், 48 கி.மீ.,க்கு 15 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழிச்சாலை உள்ளது. மேலும், தஞ்சாவூரிலேயே, 21 கி.மீ.,க்கு 10 மீட்டர் அகலம் கொண்ட சாலை உள்ளது. புதுக்கோட்டையில் 45 கி.மீ.,க்கு 7 மீட்டர் சாலையும், சிவகங்கையில் 83 கி.மீ.,க்கு 10 மீட்டர் சாலையும், ராமநாதபுரத்தில் 44 கி.மீ.,க்கு 7 மீட்டர் சாலையும் உள்ளது. போக்குவரத்து செறிவின் அடிப்படையில், நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பொதுவாக, 17,250 வாகன போக்குவரத்து இருந்தால் மட்டுமே, நான்கு வழிச்சாலை அமைக்க முடியும். சாலை பணிக்கு பெரும் நிதி தேவைப்படும். நான்கு மாவட்ட தேவை என்பதால், முதல்வரின் அனுமதி பெற்று, இந்த சாலை அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நான்கு ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என கேட்டுள்ளார். ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு, ஒரு லட்சம் வாகனங்கள் சென்று வர வேண்டும். அவ்வாறு இருந்தால், நான்கு வழிச்சாலை அமைக்கும்போது, அந்த பணியும் சேர்த்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

