/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தஞ்சாவூர் பெண் பஸ்சில் தவறவிட்ட ஆவணங்களை ஒப்படைத்த போலீசார்
/
தஞ்சாவூர் பெண் பஸ்சில் தவறவிட்ட ஆவணங்களை ஒப்படைத்த போலீசார்
தஞ்சாவூர் பெண் பஸ்சில் தவறவிட்ட ஆவணங்களை ஒப்படைத்த போலீசார்
தஞ்சாவூர் பெண் பஸ்சில் தவறவிட்ட ஆவணங்களை ஒப்படைத்த போலீசார்
ADDED : நவ 21, 2024 04:21 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஸ்சில் தஞ்சாவூர் பெண் தவறவிட்ட ஆவணங்களை மீட்டு அப்பெண்ணிடம் ராமநாதபுரம் போலீசார் ஒப்படைத்தனர்.
தஞ்சாவூர் வடகரை பொன்காடு பகுதியை சேர்ந்த மணியன் மனைவி சங்கீதா 27. இவர் திருச்செந்துார் சென்று விட்டு தஞ்சாவூர் திரும்பிய போது இவரது பையை மணிபர்சுடன் தவற விட்டார். இது குறித்து ராமநாதபுரம் நகர் போலீசில் சங்கீதா புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சங்கீதா தவறவிட்ட பையை எடுத்து வைத்திருந்தவரிடம் இருந்து மீட்டனர். அதில் சங்கீதாவின் ஆதார் கார்டு, ஏ.டி.எம்.,கார்டு, நகைக்கடன் வைத்தற்கான வங்கி ரசீது, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததை மீட்டு சங்கீதாவிடம் ஒப்படைத்தனர்.
தவற விட்ட பையை கண்டுபிடித்து கொடுத்த போலீசாருக்கு சங்கீதா நன்றி தெரிவித்தார்.