/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வு எளிது: சென்டம் எடுப்பது கடினம் சென்டம் எடுப்பது கடினம்
/
பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வு எளிது: சென்டம் எடுப்பது கடினம் சென்டம் எடுப்பது கடினம்
பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வு எளிது: சென்டம் எடுப்பது கடினம் சென்டம் எடுப்பது கடினம்
பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வு எளிது: சென்டம் எடுப்பது கடினம் சென்டம் எடுப்பது கடினம்
ADDED : ஏப் 08, 2025 06:59 AM

ராமநாதபுரம் : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கணித வினாக்கள் எளிமையாக இருந்தன. அதே சமயம் 1 மற்றும் 5 மதிப்பெண் பிரிவில் தலா ஒரு வினா கடினமாக இருந்ததால் இவ்வாண்டு கணிதத்தில் அதிகமானவர்கள் சென்டம் எடுப்பது சிரமம் என ராமநாதபுரம் மாணவர்கள் தெரிவித்தனர்.
எதிர்பார்த்ததை விட எளிது
வி.மானஷா, இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்:
கணிதத்தேர்வில் 100க்கு 100 எடுக்க வேண்டும் என படித்தோம். எதிர்பார்த்தபடியே ஏற்கனவே மாதிரி தேர்வுகளில் கேட்டிருந்த வினாக்கள் வந்திருந்ததால் எளிதாக பதிலளிக்க முடிந்தது. கிராப்ட், ஜாமென்ட்ரி தலா 8 மதிப்பெண்கள் அப்படியே கிடைக்கும்.
விடைகளை எழுதி முடித்து திரும்பி சரிபார்க்கும் அளவிற்கு நேரம் கிடைத்தது. அதே சமயம் 1, 5 மதிப்பெண் பிரிவில்புத்தகத்தின் வெளியே இருந்துகேள்வி கேட்டிருந்தனர். இதனால் சென்டம் கிடைக்காது 97 மதிப்பெண் வரை கிடைக்கும்.
அதிக மதிப்பெண்கள் பெறலாம்
எஸ். அன்புநிவாஸ், ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்:
5 மார்க் கட்டாய வினாவிற்கு பதிலளிக்க சிரமப்பட்டேன். ஒரு மதிப்பெண் பிரிவில் 2வது கேள்வி ஏ 2-பி-க்கு என்பதற்குபதிலாக பி 2 - ஏ என சிந்தித்து விடையளிக்கும் வகையில் கிரியேட்டிவ் ஆக கேட்டுள்ளனர்.
இந்த வினாவிற்கு நன்றாக படித்தவர்களுக்கு முழுமதிப்பெண் கிடைக்கும். மற்றபடி தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. சுமாராக படிப்பபவர்கள் கூட 80 முதல் 90 என அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.
கிரியேட்டிவ் வினா சிரமம்
சி.மூவிகா, வீட்டு வசதிவாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் நலச்சங்க மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்:
ஒரு மதிப்பெண் பிரிவில் 14ல் ஒன்றை தவிர்த்து மற்ற அனைத்தும் வினாக்களும் எளிதாக இருந்தன. 13 மதிப்பெண்கள் அப்படியே கிடைக்கும். 5 மதிப்பெண் பகுதியில் ஒரு கட்டாய வினா புத்தகத்தில் உட்பகுதியில் இருந்து கிரியேட்டிவ் ஆக கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ளேன். ஆனால் முழு மதிப்பெண் கிடைக்காது என்பதால் சென்டம் பெற முடியாது. 95 மதிப்பெண்கள் வரை கிடைக்கும்.
தோல்விக்கு வாய்ப்பு இல்லை
கே. செந்துார் முருகநாதன், அரசு உயர்நிலைப்பள்ளி, இளஞ்செம்பூர், முதுகுளத்துார்:
கணிதம் கடினமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் மாதிரி தேர்வில் படித்த வினாக்கள் இடம் பெற்றிருந்ததால் தோல்வி பயம் நீங்கியது. 100 மதிப்பெண்களில் 60 மதிப்பெண்களுக்கு மேல் எளிதாக பெறலாம். அனைவரும் தேர்ச்சி பெறலாம். கணிதத் தேர்வில் தோல்வி அடைய வாய்ப்பே இல்லை.
சென்டம் எடுப்பது சிரமம்
எஸ்.நாகநாதன், கணித ஆசிரியர், செய்யது அம்மாள் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் பிரிவில் 14 வினாக்கள், 2 மதிப்பெண் பிரிவில் 14க்கு 10 வினாக்கள், 5 மதிப்பெண்கள் பிரிவில் 14ல் 10 வினாக்கள், கிராப்ட், ஜாமென்ட்ரி தலா 8 மதிப்பெண்கள் என 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்டுள்ளனர்.
இதில் 5 மதிப்பெண் பிரிவில் கட்டாய வினா புத்தகத்தில் இருந்து இல்லாமல் வெளியே இருந்து கிரியேட்டிவ் ஆக கேட்டுள்ளனர். அந்த கட்டாய வினாவிற்கு மாணவர்கள் பதிலளித்துள்ளனர். முழுத்தீர்வு காண்பது கடினம் என்பதால் ஐந்து மதிப்பெண் எடுப்பது சிரமம்.
இதே போல ஒரு மதிப்பெண் பிரிவில் ஒரு கேள்வி வந்துள்ளது. இந்த இரு வினாக்களுக்கும் பதிலளிக்க மாணவர்கள் திணறியுள்ளனர். இதன் காரணமாக கணிதப்பாடத்தில் நிறைய மாணவர்கள்சென்டம் எடுப்பது சிரமம். அனைவரும் தேர்ச்சி பெறலாம், 85 முதல் 97 மதிப்பெண்கள் வரை அதிக மாணவர்கள் எடுப்பார்கள்.