/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட அளவிலான 26வது செஸ் போட்டி ஏராளமானோர் பங்கேற்பு
/
மாவட்ட அளவிலான 26வது செஸ் போட்டி ஏராளமானோர் பங்கேற்பு
மாவட்ட அளவிலான 26வது செஸ் போட்டி ஏராளமானோர் பங்கேற்பு
மாவட்ட அளவிலான 26வது செஸ் போட்டி ஏராளமானோர் பங்கேற்பு
ADDED : ஜூலை 29, 2025 12:24 AM
கீழக்கரை:: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 10வது நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட செஸ் கழகம் சார்பில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ரோட்டரி கிளப், கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான 26வது செஸ் போட்டி நடந்தது.
ரோட்டரி சங்க துணை கவர்னர் சுந்தரம் தலைமை வகித்தார். இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகைதீன் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். மாவட்ட செஸ் கழகச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் குணசேகரன், ராஜன், பாலமுருகன், வள்ளி விநாயகம், புரவலர் தேவி உலகராஜ், ரோட்டரி சங்கத் தலைவர் சிவகார்த்திகேயன், செயலாளர் ஆண்டனி சதீஷ், பொருளாளர் சபீக், உட்பட பலர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகளை ரோட்டரி சங்க நிர்வாகி டாக்டர் ரம்யா, நகராட்சி துணை சேர்மன் ஹமீது சுல்தான், கவுன்சிலர் காசிம் மரைக்காயர் ஆகியோர் வழங்கினர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட செஸ் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.