/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கைக்கு கிடைச்ச தொகை.. கணக்குல வரல..
/
கைக்கு கிடைச்ச தொகை.. கணக்குல வரல..
ADDED : டிச 19, 2024 04:29 AM
ராமநாதபுரம்: தமிழக அரசின் ஓய்வூதியர்களுக்கு அக்., மாதம் அகவிலைப்படி நிலுவைத்தொகை மற்றும் பென்ஷன் தொகை சேர்த்து ஓய்வூதியர்கள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம்மட்டுமே கணக்கில் ஏற்றப்பட்டுள்ளது.
அகவிலைப்படி நிலுவைத் தொகை பணம் வழங்கிய பிறகும் பென்ஷன் கணக்கில் வராததால் ஓய்வூதியர்கள் வருமான வரி கணக்கிடுவதில் குழப்பம் அடைந்துஉள்ளனர்.
தமிழக அரசின் ஓய்வூதியர்களுக்கு 2024 அக்., மாத பென்ஷன் தொகையுடன் அகவிலைப்படி நிலுவைத்தொகையும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓய்வூதியர்கள் வருமான வரி பிடித்தம் செய்வதற்காக ஒருங்கிணைந்த நிதி மனித வள மேலாண்மை இணையதளம் (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்) களஞ்சியம் 2.0 முகவரியில் தங்களது பென்ஷன் விபரங்களை எடுத்து பார்த்த போது அக்., மாத பென்ஷன் தொகை மட்டுமே கணக்கில் ஏற்றப்பட்டுள்ளது.
அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கியது கணக்கில் ஏற்றப்படவில்லை. இதனால் ஓய்வூதியர்கள் வருவமான வரிக்காக தாங்கள் பெற்ற பென்ஷன் தொகையை கணக்கிட்டு வரி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. இதன் காரணமாக ஓய்வூதியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

