/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'பார்' ஆனது பெரிய கண்மாய் பாலம்
/
'பார்' ஆனது பெரிய கண்மாய் பாலம்
ADDED : ஜன 05, 2024 05:17 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இளையான்குடி செல்லும் ரோட்டில் இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் பெரிய கண்மாயின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த கண்மாய் பாலத்தின் வழியாக கண்மாய்க்கு அப்பால் உள்ள கிராமத்தினரும் அதிகளவில் வந்து செல்வதால் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்நிலையில் பெரிய கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மதுப் பிரியர்கள் மாலை நேரங்களில் பெரிய கண்மாய் பாலத்தில் அமர்ந்தவாறு மது அருந்துவது கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மதுப் பிரியர்களை கண்டு அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் மது போதை தலைக்கேறிய பின் சிலர் பாட்டில்களை ரோட்டில் உடைத்து செல்வதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட போலீசார் இரவு நேரங்களில் பாலம் பகுதியில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.