நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல் : வல்லக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீரா நஜ்முதீன் 42, இவரது மகன் சேக் முகமது ஹாரிஸ் 14. மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன். நேற்று சிறுவனின் அம்மா சுமையா மகன் சேக் முகமது ஹாரிஸ்சை தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு ஊருணியில் குளிக்க சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பியவர் மகனை பார்க்க சென்ற போது வீட்டில் இல்லாததை கண்டு 'சிசிடிவி' கேமரா உதவியுடன் தேடி பார்த்ததில் வல்லக்குளம் ஊருணிக்கு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து ஊருணியில் தேடியதில் சிறுவன் உடல் மீட்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.