/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்சிப்பொருளான களிமண்குண்டு கழிப்பறை
/
காட்சிப்பொருளான களிமண்குண்டு கழிப்பறை
ADDED : ஜன 27, 2025 05:14 AM

திருப்புல்லாணி :  திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட களிமண்குண்டு ஊராட்சியில் அமைக்கப்பட்ட கழிப்பறை வளாகம் பயன்பாடின்றி உள்ளது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் இரண்டாவது பிரிவின் கீழ் 2020 - - 22 ஆம் ஆண்டிற்கான பெண்கள் சுகாதார கழிப்பறை வளாகம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் திட்டமதிப்பீட்டு தொகை ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.
இதனருகே தொடக்கப்பள்ளி மற்றும் பொதுமக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். தற்பொழுது பயன்படாத நிலையில் உள்ள கழிப்பறை வளாகத்தால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே  பயன்பாட்டிற்கு கொண்டுவர யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

