/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் துவங்கின
/
முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் துவங்கின
ADDED : ஆக 27, 2025 12:26 AM

ராமநாதபுரம்; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் நடப்பு ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் நேற்று துவக்கி வைத்தார். எஸ்.பி., சந்தீஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க ராமநாதபுரத்தில் 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று துவங்கிய நிலையில் செப்., 12 வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கவுள்ளன.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பேசிய தாவது:
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதுடன் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் விளையாட்டு பயனுள்ளதாக இருக்கும். மாவட்ட அளவில் மட்டுமின்றி தொடர்ந்து முன்னேறி மாநில அளவிலும், இந்திய அளவிலும் வெற்றிப்பெற்று ராமநாதபுரத்திற்கு பெருமை தேடித்தர வேண்டும் என்றார்.
முதல் நாளான நேற்று பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான இறகுப்பந்து, மேசைப்பந்து, ஹாக்கி, பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்தது. மாணவிகளுக்கான இறகுப்பந்து போட்டி ஆர்.கே.எஸ் அகாடமியிலும், பொதுப்பிரிவு ஆண்கள் பிரிவுக்கான கிரிக்கெட் போட்டி ஆயுதப்படை கவாத்து மைதானத்திலும், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் செய்யது அம்மாள் சி.பி.எஸ்.சி., பள்ளி, செய்யது அம்மாள் கலை கல்லுாரியிலும், கூடைப்பந்து போட்டி பரமக்குடி ஆர்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடந்தது.