/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆண் நோயாளிகள் முன்னிலையில் பெண்களுக்கு ஊசி போடும் அவலம்
/
ஆண் நோயாளிகள் முன்னிலையில் பெண்களுக்கு ஊசி போடும் அவலம்
ஆண் நோயாளிகள் முன்னிலையில் பெண்களுக்கு ஊசி போடும் அவலம்
ஆண் நோயாளிகள் முன்னிலையில் பெண்களுக்கு ஊசி போடும் அவலம்
ADDED : அக் 01, 2024 11:19 PM
திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனையில் ஆண் நோயாளிகளின் முன்னிலையில் பெண்களுக்கு ஊசி போடுவதால் பெண்கள் தயங்குகின்றனர்.திருவாடானையில் அரசு மருத்துவமனையில் தினமும் 300க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு சிகிச்சைக்கு வரும் ஆண்களை விட பெண்கள் சிரமப்படுகின்றனர். மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகளுக்கு ஊசி போடும் அறை உள்ளது.
மறைவான தடுப்பு எதுவும் இல்லாததால் ஆண்கள் முன்னிலையில் பெண்களுக்கு ஊசி போடப்படுகிறது.
இதனால் சில பெண்கள் கூச்சப்பட்டு ஊசி போடாமல் மாத்திரைகளை மட்டும் வாங்கிச் செல்கின்றனர். தொண்டியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:
கை, கால் வலிக்காக சிகிச்சைக்கு சென்றோம். டாக்டரின் அறிவுரைப்படி ஊசி போடும் இடத்திற்கு சென்றால் அங்கு ஆண்கள், பெண்களுக்கு மறைவான இடம் இல்லை. ஆண்கள் முன்னிலையில் பெண்களுக்கு ஊசி போட்டனர்.
பெண்களின் இடுப்பில் ஊசி போடும் போது, ஆண்கள் அருகில் நிற்பதால் தயக்கமாக உள்ளது.
நர்சுகளுக்கு தெரிந்தும் இது குறித்து அவர்கள் கவலைபடுவதில்லை. உடல் நலம் கருதி வேறு வழியின்றி ஊசி போட வேண்டிய தர்ம சங்கடமான நிலை பெண்களுக்கு ஏற்படுகிறது.
கூச்சத்தில் சில பெண்கள் ஊசி போடாமல் சென்று விடுகின்றனர்.
அரசு மருத்துவமனையில் ஆண், பெண் என தனித்தனியாக மறைவிடம் இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.