/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இருள் சூழ்ந்த தொண்டி பழைய பஸ் ஸ்டாண்ட்
/
இருள் சூழ்ந்த தொண்டி பழைய பஸ் ஸ்டாண்ட்
ADDED : டிச 09, 2024 05:11 AM
தொண்டி: தொண்டி பழைய பஸ்ஸ்டாண்டில் ைஹமாஸ் விளக்கு எரியாததால் இருள் சூழ்ந்துள்ளதால், பயணிகள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
தொண்டி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மூன்று ரோடுகள் சந்திக்கும் இடம் உள்ளது. மதுரை - தொண்டி, ராமநாதபுரம்- பட்டுகோட்டை செல்ல சந்திக்கும் இந்த இடத்தில் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இங்கு அமைக்கபட்ட ைஹமாஸ் விளக்கு கடந்த இரு மாதங்களாக எரியவில்லை.
இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் இரவு நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் அச்சத்தில் உள்ளனர். வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்துள்ளனர். பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் ைஹமாஸ் விளக்கு எரிய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.