/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல் பத்து உற்ஸவம் துவக்கம் ஜன.9 மாலை மோகினி அவதாரம்
/
வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல் பத்து உற்ஸவம் துவக்கம் ஜன.9 மாலை மோகினி அவதாரம்
வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல் பத்து உற்ஸவம் துவக்கம் ஜன.9 மாலை மோகினி அவதாரம்
வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல் பத்து உற்ஸவம் துவக்கம் ஜன.9 மாலை மோகினி அவதாரம்
ADDED : ஜன 01, 2025 08:04 AM

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்ஸவம் நேற்று துவங்கியது.
பரமக்குடியில் சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் பரமஸ்வாமி, உற்ஸவர் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலிக்கின்றனர்.
மார்கழி மகா உற்ஸவம் நடந்து வரும் நிலையில் நேற்று காலை திருஅத்யயன உற்ஸவம் எனப்படும் பகல்பத்து விழா துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாள் ஏகாந்த சேவையில் சவுந்தரவல்லி தாயார் முன்பு உள்ள மண்டபத்தில் அமர்ந்தார்.
அப்போது நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டு பன்னிரு ஆழ்வார்கள் சன்னதியில் தீர்த்த பிரசாதம் வழங்குதல் மற்றும் சடாரி சாதிக்கப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. மேலும் தினந்தோறும் பாகவதர்களின் பஜனை பாடல்கள் பாடப்பட்டு வருகிறது.
ஜன.9 மாலை 4:00 மணிக்கு பெருமாள் மோகினி அலங்காரத்தில் வீதி உலா வருகிறார். 5:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோயில் நடை அடைக்கப்படும். மறுநாள் (ஜன.10) அதிகாலை 4:00 மணி துவங்கி திருப்பள்ளி எழுச்சிக்கு பின் 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு ஏகாதேசி மண்டபத்தில் அமர்ந்து 10:00 மணிக்கு மேல் மகா அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து அன்றைய தினம் இரவு தொடங்கி ராப்பத்து விழா நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.