/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் துாக்குப் பாலத்தை பிப்., 5க்கு பின் நகர்த்த முடிவு
/
பாம்பன் துாக்குப் பாலத்தை பிப்., 5க்கு பின் நகர்த்த முடிவு
பாம்பன் துாக்குப் பாலத்தை பிப்., 5க்கு பின் நகர்த்த முடிவு
பாம்பன் துாக்குப் பாலத்தை பிப்., 5க்கு பின் நகர்த்த முடிவு
ADDED : ஜன 31, 2024 01:20 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைத்துள்ள புதிய ரயில் துாக்குப் பாலத்தை பிப்.,5க்கு பின் நகர்த்தி நடுப்பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாம்பன் கடலில் 2 கி.மீ., துாரத்துக்கு அமைந்துள்ள ரயில் பாலம் பலவீனமாகி நடுவில் உள்ள துாக்கு பாலம் சேதமடைந்தது.
இதனால், 2022 முதல் ராமேஸ்வரத்துக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், 525 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி துரிதமாக நடக்கிறது. துாண்கள் அமைத்து 1.5 கி.மீ.,க்கு இரும்பு கர்டர்கள், தண்டவாளங்கள் பொருத்தியுள்ளனர்.
பாலத்தின் நடுவில் கப்பல்கள், படகுகள் கடந்து செல்ல ஏதுவாக துாக்கு பாலத்தை வடிவமைக்கும் பணி நடந்ததால் மீதமுள்ள 500 மீட்டரில் இரும்பு கர்டர், தண்டவாளம் பொருத்தப்படவில்லை.
500 டன் எடையில் புதிய துாக்கு பாலம் பாம்பன் கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 200 டன் அதிகரித்து 700 டன்னாக உயர்ந்துள்ளது.
இந்த துாக்கு பாலத்தை வடிவமைக்கும் பணி நுாறு சதவீதம் முடிந்தது. பிப்., 5க்கு பின் நகர்த்தி பாலத்தின் நடுவில் பொருத்த திட்டமிட்டுள்ளனர்.
புதிய துாக்கு பாலத்தை நடுவில் கொண்டு செல்ல 20 முதல் 30 நாட்கள் என கூறப்படுகிறது.