/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் பலியான மீனவர் குடும்பம் தவிப்பு 3 மாதமாகியும் நிவாரணம் கிடைக்கல...

ADDED : டிச 17, 2024 03:41 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவர் எமரிட் 48, மீன்பிடிக்கச் சென்ற போது கடலில் இறந்த நிலையில் 3 மாதங்களாகியும் அரசு நிவாரணத் தொகை கிடைக்காமல் அவரது குடும்பத்தினர் தவிக்கின்றனர்.
பாம்பன் அருகே தங்கச்சிமடம் ஐயந்தோப்பை சேர்ந்த எமரிட் மனைவி சலோமியா கூறியதாவது: எனது கணவர் ஆக.26ல் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றார். ஆக.28ல் நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் இறந்து விட்டார்.
அவரது உடலை அடக்கம் செய்த செலவுக்கு கூட இதுவரை எந்த உதவியும் அரசு செய்யவில்லை. 2 மகன், ஒரு மகளுடன் சிரமப்படுகிறேன். அவர்களை படிக்க வைக்க முடியவில்லை. 14 வயதான மூத்த மகன் கூலி வேலைக்கு சென்று தரும் வருமானத்தில் பிழைத்து வருகிறோம்.
எனவே எங்களது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.