ADDED : அக் 19, 2024 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : அளுந்திக்கோட்டை பாண்டி மகன் கணேஷ் 34. விவசாயியான இவர் ஆர்.எஸ்.மங்கலத்தில் பஞ்சர் ஒட்டும் கடையும் வைத்திருந்தார்.
நேற்றுமுன்தினம் காலை தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்ட கணேஷ், நெல் வயலில் களைகளை கட்டுப்படுத்த கை தெளிப்பான் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்தார். திடீரென வரப்பில் மயங்கி விழுந்தார். ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர். இருமாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது.